பெண் சிங்கம் படத்தில் ஓரங்க நாடகம் – குரல் கொடுத்த வைரமுத்து
கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படத்தில் வைரமுத்துவின் குரலும் நடித்துள்ளதாம். கருணாநிதி கதை வசனம் எழுத உருவாகியுள்ள படம் பெண் சிங்கம். மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்துள்ளார். அதில் இடம் பெறும் வீரமங்கை வேலு நாச்சியார் ஓரங்க நாடகத்தில் வேலு நாச்சியாராக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த நாடகத்தைப் பார்த்த முதல்வர் கருணாநிதி, பின்னணிக் குரலாக வைரமுத்துவின் குரல் இடம் பெற்றால் பொருத்தமாக இருக்கும் என்று யோசனை தெரிவித்துள்ளார். இதை வைரமுத்துவிடம் கொண்டு சென்றனர் படக்குழுவினர். கருணாநிதியே தனது பெயரை பரிந்துரைத்த்தைக் கேள்விப்பட்ட வைரமுத்து உடனே ஒத்துக் கொண்டு குரல் கொடுத்து முடித்தாராம். கருணாநிதியின் 2 பக்க வசனத்தை 2 மணி நேரத்தில் பேசி முடித்தாராம் வைரமுத்து.
|