வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து !

 

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த்தாய் வாய்த்து பாடல் இயற்றிட உள்ளதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் போர் பிரேம் பிரிவியூ திரையரங்கில் ‌கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது, ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து உலகமே எழுந்து நின்று கைத் தட்டுகிறது. முன்பு இந்தி திரையுலகிற்கு தலைமை தாங்கும் தகுதி தமிழ் திரையுலகிற்கு இருந்தது. தற்போது உலக திரையுலகத்திற்கு தலைமை தாங்கும் தகுதி இந்திய திரையுலகிற்கு ஏ.ஆர்.ரஹ்மானால் வந்து இருக்கிறது. மலேசிய தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில் வேறு பாடல் ஒன்றை பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவர்கள் பாடவில்லை. அப்பாட்டில் இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டு இருக்கிறது. அதை உலகத் தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலை தீர்க்க உலகத் தமிழர்களுக்கு என புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ரஹ்மான் இசையில் எழுத உள்ளேன். இதற்கு ரஹ்மானும் ஒப்புக் கொண்டுள்ளார், என்றார்.

 


செய்திக் கீற்று

கிலி வீழலாம் – புலி வீழ மாட்டான்

கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

வைரமுத்துவின், என் தம்பி வைரமுத்து – கலைஞர் சொற்பொழிவுகள் என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

இன்று கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.

'கிலி' வீழலாம் – 'புலி' வீழ மாட்டான்

கிளிநொச்சி வீழலாம். ‘கிலி’ வீழலாம். ஆனால் புலிகள் வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் இரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது. நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக் கொண்டோம். இன்னும் காலம் கடந்து விடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு போரை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.