வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செய்திக் கீற்று

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து !

 

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த்தாய் வாய்த்து பாடல் இயற்றிட உள்ளதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் போர் பிரேம் பிரிவியூ திரையரங்கில் ‌கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது, ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து உலகமே எழுந்து நின்று கைத் தட்டுகிறது. முன்பு இந்தி திரையுலகிற்கு தலைமை தாங்கும் தகுதி தமிழ் திரையுலகிற்கு இருந்தது. தற்போது உலக திரையுலகத்திற்கு தலைமை தாங்கும் தகுதி இந்திய திரையுலகிற்கு ஏ.ஆர்.ரஹ்மானால் வந்து இருக்கிறது. மலேசிய தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில் வேறு பாடல் ஒன்றை பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவர்கள் பாடவில்லை. அப்பாட்டில் இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டு இருக்கிறது. அதை உலகத் தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலை தீர்க்க உலகத் தமிழர்களுக்கு என புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ரஹ்மான் இசையில் எழுத உள்ளேன். இதற்கு ரஹ்மானும் ஒப்புக் கொண்டுள்ளார், என்றார்.