வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நூல்கள்
கவிபேரரசு வைரமுத்துவின் நூல்கள்
  1. வைரமுத்து  கவிதைகள்
  2. கள்ளிகாட்டு  இதிகாசம்
  3. இதனால் சகலமானவர்களுக்கும்
  4. இந்த  பூக்கள்  விற்பனைக்கு  அல்ல
  5. இந்த  குளத்தில்  கல்  எறிந்தவர்கள்
  6. ஒரு  போர்க்களமும்  இரண்டு  பூக்களும்
  7. காவி  நிறத்தில்  ஒரு  காதல்
  8. என்  பழைய  பனை ஓலைகள்
  9. இன்னொரு  தேசிய  கீதம்
  10. வைகறை  மேகங்கள்
  11. ரத்ததானம்
  12. சிற்பியே  உன்னை  செதுக்குகிறேன்
  13. எல்லா  நதியுளும்  என்  ஓடம்
  14. திருத்தி  எழுதிய  தீர்ப்புகள்
  15. கவிராஜன்  கதை
  16. வானம்  தொட்டுவிடும் தூரம்தான்
  17. தண்ணீர்  தேசம்
  18. நேற்று  போட்ட  கோலம்
  19. தமிழுக்கு  நிறம்  உண்டு
  20. மீண்டும்  என்  தொட்டிலுக்கு
  21. கொடிமரந்தின்  வேர்கள்
  22. வில்லோடு  வா  நிலவே
  23. என்  ஜன்னலின்  வழியே
  24. ஒரு மௌனத்தின்  சப்தங்கள்
  25. கல்வெட்டுகள்
  26. கேள்விகளால்  ஒரு  வேள்வி
  27. கொஞ்சம்  தேநீர்  நிறைய  வானம்
  28. வடுகபட்டி  முதல்  வல்கா  வரை
  29. பெய்யென  பெய்யும் மழை
  30. இதுவரை நான்
  31. ஒரு  கிராமத்து  பறவையும்  சில கடல்களும்
  32. பாற்கடல்
  33. கருவாச்சி காவியம்
 


செய்திக் கீற்று

இந்தியாவை ஒன்று சேர்க்க முடியாது

 

"அரசியல், வணிகம் போன்றவற்றால் இந்தியாவை ஒன்று சேர்க்க முடியாது" என சென்னையில் நடந்த கவியரங்கம் ஒன்றில் பேசும் போது கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒலி-ஒளிபரப்பாளர் சங்கம்,​​ சென்னை எஸ்.பி.ஐ.​ ஆகியவற்றின் சார்பில் "பொன்னொளிர் பாரதம்" என்ற தலைப்பில் தேசிய கவியரங்கம் சென்னை வானொலி நிலையத்தில் செவ்வாய்க் கிழமை (09/02/2010) நடைபெற்றது. இக்கவியரங்கத்துக்குத் தலைமையேற்று கவிஞர் வைரமுத்து பேசும் போது, "தாய் மொழி கண் போன்றது.​ பிற மொழிகள் கண்ணாடி போன்றவை.​ கண் இல்லாமல் கண்ணாடிக்குப் பயனில்லை.​ மொழிகள் வேறாக இருந்தாலும்,​​ அவற்றுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை கவிஞர்கள் வாசித்த கவிதைகள் மூலம் அறிய முடிகிறது. அரசியல்,​​ மதம்,​​ வணிகம் போன்றவற்றால் இந்தியாவை ஒன்று சேர்க்க முடியாது.​ மொழியால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.

கவிஞர்களை, படைப்பாளிகளை வாழும் போதே கவுரவித்து ஊக்கப்படுத்த வேண்டும். அதே வேளையில், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எந்த நிலையிலும் பொய் எழுதக் கூடாது. நெஞ்சில் இருந்து வரும் உண்மைகளை எழுதுங்கள். பெயர், புகழுக்காக எதையும் எழுதாதீர்கள். பெங்களூரில் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அடங்கிய மாநாடு ஒன்றை நடத்த வேண்டும். அந்த மாநாட்டுக்காக நானே முன் நிற்கிறேன். தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. அது என்னவென்றால், தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன்படி தை மாதத்துக்கு பிறகு இந்த மாநாட்டை நடத்துவோம் என்றார்.