வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நாவல்கள்
  • வில்லோடு வா நிலவே
  • தண்ணீர் தேசம்
  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • கருவாச்சி காவியம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம்
 


செய்திக் கீற்று

 

கவியரசு வைரமுத்து சூளுரை

 

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது:

இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக விழவேண்டுமா?. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும். தனது ஒட்டுமொத்த பொதுவாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதலமைச்சரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்தவேண்டும் என்றார் அவர்